Sunday, January 9, 2011

கொடநாடு பரோட்டா செய்வது எப்படி?

கொடநாடு பரோட்டா செய்வது எப்படி?
http://www.roudhrampazhagu.com/UserFiles/Image/paratha.jpg
Add caption


எக்லஸ் பரோட்டா:
அனைத்து பரோட்டா வகைகளுக்கும் எக் போட்டால் மிருதுவாக இருக்கும் என்பதால் அனைத்து ஹோட்டல்களீலும் பரோட்டாக்களுக்கு எக் சேர்க்கிறார்கள். சைவப்பிரியர்களுக்கு மற்றும் அசைவத்தை கைவிட்டவர்களுக்கு இதோ கொடநாடு பரோட்டா மெனு.

தேவையான பொருள்கள்:
1/2கி மைதா,1-சிட்டிகை சோடா உப்பு,1-spoon சர்க்கரை, சுவைக்கேற்ப உப்பு,  3spoon எண்ணெய், தண்ணீர்.

மாவு தயாரிக்கும் முறை:
    மைதாவுடன் சோடா உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, சர்க்கரை, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இக்கலவையை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

செய்முறை:

             மாவை உருண்டைகளாக்கி பலகையின் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி உருண்டையை  மெல்லியதாக தேய்க்கவும். பின் இதன் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி பரவலாக தேய்த்து ஒரு ஓரத்தில் பிடித்து தூக்கி (மடிப்பு, மடிப்பாக இருக்கும்) அதை அப்படியே பலகையின் மேல் வைத்து சுற்றவும்.
பின் லேசாக பூரி கட்டையால் தேய்க்கவும். இதை தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். இது போல் ஒவ்வொரு உருண்டையையும் இதே போல் செய்யவும்.
    
 http://samayal.chettinadrecipes.com/wp-content/uploads/2010/12/parrota.jpg

சைட் டிஷ் - வெஜிடபிள் குருமா / சென்னா மசாலா.....
    நர்ளை வேறொரு சமையலுடன் உங்களை சந்திக்க வருவது அபி.... div style='clear: both;'/>

1 comment:

Unknown said...

நல்ல பதிவு.

Post a Comment