Monday, December 27, 2010

மனைவி ஒரு மந்திரி

1. மனைவி ஒரு கம்பளிப் போர்வை போன்றவள். அதை நீ போர்த்திக்
கொண்டால் சில வேளைகளில் தொந்தரவாக இருக்கும். அதைத்
தூக்கி எறிந்துவிட்டாலோ குளிர் தாங்கவே முடியாது.

2. மனைவி தரும் சுகம் அமிர்தம். கள்ளக்காதலால் பெறும் சுகம்
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பைப் போன்றதாகும்.

3. காதலி முடிவடையாத புத்தகம்; மனைவி முழு புத்தகம்;
கள்ளக்காதலி கறையான்.

4. காதல் என்ற படகினைத் திருமணம் என்ற கடலினில் கணவன்
என்னும் படகோட்டி எவ்வளவு சாமர்த்தியமாக ஓட்டினாலும்
 மனைவி என்ற சூறாவளி அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.

5. உங்களுக்கு வரும் மனைவி எப்படிக் கற்புள்ளவளாகவும்,
கபடமற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ
அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள்
என்பதை மறவாதீர்கள்.

6. மனைவி கணவனுக்கு அவனுடைய சின்னஞ்சிறு வயதில் எஜமானி,
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தாதி.

7. இந்த உலகில் மட்டமான பெண் ஒரே ஒருத்திதான் உண்டு. அவளும்
தன் மனைவிதான் என்று ஒவ்வொறு கணவனும் நினைக்கிறான்.

8. மனைவியின் மனதை புரிந்துக்கொள்வதற்குள் பாதி ஆயுள்
முடிந்துவிடும்.

9. கணவன் மறப்பதைக் குறித்து மனைவி வருந்துகிறாள். மனைவி
மறக்காமல் இருப்பதைக் குறித்து கணவன் வருந்துகிறான்.

10. குதிரையை ஒரு மாதம் கழித்துப் புகழ வேண்டும். மனைவியை
ஒரு வருடம் கழித்துப் புகழ வேண்டும்.

11. திருமண வாழ்க்கையில் ஒரு வினோதம் என்னவென்றால்
கெட்டவர்களுக்கு மிக நல்ல மனைவிகள் வாய்த்து விடுகிறார்கள்.
மனைவியின் பொறுமையைச் சோதிப்பதற்கு இதைவிட வேறு
வில்லங்கமான வாழ்க்கை என்ன இருக்கிறது?

12. புருஷன் பேச்சில் மனைவிக்குக் கவனம் எப்போதும் இருக்கும்
தெரியுமா? அந்தப் பேச்சு இன்னொரு பெண்ணை பற்றி
இருக்கும்போதுதான்.

13. கணவன் மனைவிக்குத் துரோகம் செய்தால், அது வீட்டுக்குள்ளிருந்து
வீதியில் காறி உமிழ்வது போன்றது. மனைவி, கணவனுக்குத் துரோகம்
செய்தால் அது வீதியிலிருந்து வீட்டுக்குள் காறி உமிழ்வது போன்றது.

14. இந்தக் காலத்தில் பிரம்மச்சாரிகள் கல்யாணம் செய்து
கொண்டவரிகளைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள். கல்யாணம்
செய்து கொண்டவர்கள் பிரம்மச்சாரிகளைப் போன்று வாழ்ந்து
வருகிறார்கள். div style='clear: both;'/>

3 comments:

Abi said...

maruthuvam topic migavum payanullathe..

Abi said...

good

Unknown said...

இந்தக் காலத்தில் பிரம்மச்சாரிகள் கல்யாணம் செய்து
கொண்டவரிகளைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள். கல்யாணம்
செய்து கொண்டவர்கள் பிரம்மச்சாரிகளைப் போன்று வாழ்ந்து
வருகிறார்கள். //
பிரம்மச்சாரிகள் பல கல்யாணங்கள் செய்து
கொண்டவர்களைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் உணமை

Post a Comment