1.’1 லட்சம் ஓட்டு வித்யாசத்துல ஜெயித்தது கின்னஸ் சாதனையா?’
’பின்னே மொத்த ஜனத்தொகையே 87,000 தானே?’

2.”தலைவர் ஏன் கோபமா வேட்டியை அவுத்து தலைகீழா கட்றார்?”
”கட்சி மாறிட்டா அப்படித்தான். ரெண்டு சைடுலயும் வெவ்வேற கட்சிக்கரை இருக்கும்.”
3.’பாட்டில், டப்பா என எதையும் கைக்கு எட்ற தூரத்தில் வெக்க முடியல. நம்ம பொடியன் கவுத்டறான்’
’எதிர்காலத்தில எம்.பி. ஆயிடுவான். கவலைப்படாதே...’
4.”ஏற்கனவே ஊழலில் சம்பாதித்த பணம் நிறைய இருக்கிறது. எனவே,
புதிதாக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி எங்களுக்கு இல்லை.”
5.’20 சீட்ல ஜெயிச்சா போதும்னு தலைவர் சொல்றாரே...ஆட்சியமைக்க அது போதுமா?’
’ஆட்சியை கவிழ்க்க அது போதுமே.’
6.”முதல் கட்டமா முடிஞ்ச அளவு கள்ள ஓட்டு போடுங்க. அப்படி போட முடியலைன்னா
அன்னிக்கு நைட் ஓட்டுப்பெட்டியை வாக்குச்சாவடியில இருந்து மாற்றிடலாம்....”
”ஓகோ...இரண்டு கட்டமா தேர்தல் நடக்குதுன்னாங்களே....இப்படித்தானா !!!?”
இவை அனைத்தும் எஸ்.எம்.எஸ். ஜோக்குகளே. div style='clear: both;'/>